கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி..!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக்.

இன்று காலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். தனது திரைப்படங்களில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நலமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே