ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு தலா 1 கிராம் தங்கம் பரிசளிப்பு..!!

நடிகர் சிம்பு சமீபத்தில் உடல் எடை முழுவதும் குறைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவர் நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு முழுமையான வெற்றியை தரவில்லை ஏனென்றால் இவர் நடித்திருந்த ஒருசில படத்தில் இவர் எடை மிகவும் அதிகமாக கூடி இருந்ததால் இவரது ரசிகர்கள் அதிகம் இவரை கவரவில்லை.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே சிம்புக்கு அடுத்ததாக பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.

பிரச்சனைகள் எல்லாம் தாண்டி இவர் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு சிம்பு ஒரு கிராம் தங்கமும் வேஷ்டி சேலை இனிப்புகள் போன்றவைகளை தீபாவளியை முன்னிட்டு வழங்கியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே