தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் தனுஷ் நன்றி..!!

2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றுள்ளாா்.

சிறந்த குணச்சித்திர நடிகா் (துணை நடிகா்) – விஜய் சேதுபதி (படம்: சூப்பா் டீலக்ஸ்); சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (விஸ்வாசம்), சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால்( கேடி (எ) கருப்பு துரை), சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறப்பு ஜூரி விருது என இரண்டு விருதுகள் – ஒத்த செருப்பு சைஸ் – 7 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ்ப் படமாக வெற்றி மாறன் இயக்கிய அசுரன் தேர்வாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

அசுரன் படத்துக்குத் தேசிய விருது என்கிற செய்தியோடு இன்றைய நாள் தொடங்கியது.

சிறந்த நடிகருக்கான விருதை ஒருமுறை பெறுவது கனவு, இருமுறை பெறுவது ஆசிர்வாதத்தால் தான்.

இவ்வளவு தூரம் நான் முன்னேறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு சிவசாமி கதாபாத்திரத்தை வழங்கிய வெற்றிமாறனுக்கு நன்றி.

பாலு மகேந்திரா சார் அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தபோது நீங்கள் என்னுடைய நண்பராக, சகோதரராக இருப்பீர்கள் என நினைக்கவேயில்லை.

நாம் இணைந்து உருவாக்கிய நான்கு படங்கள் மற்றும் இணைந்து தயாரித்த இரு படங்களினால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நீங்கள் நானும் பரஸ்பரம் நம்பிக்கை வைத்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

எனக்காக அடுத்து என்ன கதை எழுதியிருப்பீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

தேசிய விருது நடுவர் குழு, தாணு சார், படக்குழுவினருக்கு நன்றி.

எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்திய திரையுலகினருக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி.

எண்ணம் போல் வாழ்க்கை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே