ரிலையன்ஸ் நிறுவனத்துடனான கப்பல் கட்டும் ஒப்பந்தம் ரத்து..!!

மத்திய அரசு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடனான கப்பல்கள் கட்டும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

உரிய காலத்தில் கப்பல்களை கட்டி தராத காரணத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடனான கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

கடந்த 2011ம் வருடம் ரூ 2,500 கோடி செலவில் 5 இந்திய கப்பற்படைக்கு தேவையான 5 ரோந்து கப்பல்கள் கட்டி முடிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

ஆனால், 9 வருடங்கள் கடந்த பிறகும் கப்பல்கள் கட்டி முடிக்கப்படாததால் இரு வாரங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே