பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் நடவடிக்கை..!!

பெற்றோர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை பிள்ளைகள் மீது மாற்றி எழுதிக் கொடுத்ததும், பெற்றோர்களை கைவிடும் போக்கு தமிழகத்தில் நீண்ட நெடுநாட்களாகவே இருந்து வருகிறது.

கஷ்டப்பட்டு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கும் பெற்றோர்களை வயதான காலத்தில், முதியோர் இல்லங்களில் சேர்த்தும், வீட்டின் மூலையில் தங்க வைத்தும் பிள்ளைகள் கொடுமைப்படுத்தும் போக்கு அடிக்கடி நிகழும் சம்பவங்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, இது குறித்து வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அய்யாகண்ணு தாக்கல் செய்த வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகள் குறித்து புகார்கள் வந்தால், 6 வார காலத்திற்குள் அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே