திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளனர்.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.

பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.

எனவே திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என்று செப்டம்பர் 9-ஆம் தேதி திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலமாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே