பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமான்ய மக்களையும் கடந்து அரசியல் தலைவர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.

துரதிஷ்டவசமாக எம்எல்ஏ அன்பழகன், எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பை தொடர்ந்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே