தூத்துக்குடி: நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய துரை முத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, அங்கு எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே