74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்றுகிறார்.

நாடு முழுவதும் சனிக்கிழமை 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

முதலில் இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார்.

பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் குடியரசுத் தலைவர் உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதேபோல் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் குடியரசுத் தலைவரின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே