கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியிருந்த 191 பேரில் 190 பேர் மீட்பு!

ஒரே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். அவர் விமானத்தினுள் சிக்கியுள்ளார். ஆனால், அவர் பத்திரமாக இருக்கிறார். – எம்.பி E.T.முகம்மது பஷீர்.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

படுகாயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவமனை மற்றும் அருகாமையில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த கேரள எம்.பி E.T.முகம்மது பஷீர், ‘ ஒரே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர்.

அவர் விமானத்தினுள் சிக்கியுள்ளார். ஆனால், அவர் பத்திரமாக இருக்கிறார். ‘ என கூறியுள்ளார்.

Related Tags :

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே