புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலின் தீவிரத்தால், முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல் உள்ளிட்ட களப்பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது மகனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே