தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று புதிதாக 1,044 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலமாக சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் கரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 5,135 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 40 பேர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,044 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



 
							