#BREAKING : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“கரோனாவுக்கான தொடக்கநிலை அறிகுறிகள் இருந்ததையடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனது உடல்நலம் நல்ல நிலையில் உள்ளது. எனினும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே