கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னையில் கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து ஒரு பதிவு வெளியானது.

அந்த பதிவு இந்து மத மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக சர்ச்சை எழ பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புகாரை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 16ம் தேதி கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 414 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே