கொரோனா உச்சம்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சென்னையில் கரோனா பரவல் சற்று குறைந்திருக்கும் அதேவேளையில், மற்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

காணொலி மூலமாக நடைபெறும் இக்கூட்டத்தில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகா்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே