காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொரோனாவால் பாதிப்பு!

கோவை மாவட்ட கலெக்டரை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கடந்த ஓரிரு நாட்களாக அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே