தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 51 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு பணிகளில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி எஸ்.பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார். தீபா சத்யன் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பகலவன்- கரூர் மாவட்ட எஸ்பியாகவும், பாண்டியராஜன்- வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும், ஸ்டீபன் ஜேசுபாதம்- சிறப்பு பிரிவு எஸ்பியாகவும், அரவிந்த்- திருவண்ணாமலை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிபி சக்ரவர்த்தி- சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 414 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே