ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் சிம்பு பாடியுள்ள Superstar Anthem பாடல் வெளியானது!

கோலிவுட்டின் புது நாயகன் ஹர்பஜன் சிங் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பிரண்ட்ஷிப் படக்குழு இன்று சூப்பர்ஸ்டார் ஆந்தம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்துள்ளது.

இயக்குநர்கள் ஜான்பால் மற்றும் சாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன்சிங், அர்ஜுன், லாஸ்லியா மரியனேசன், சதிஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் பிரண்ட்ஷிப்.

இந்த திரைபடத்தின் மூலம் நேரடியாக தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஹர்பஜன் சிங்.

ஏற்கனவே சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ப்ரண்ட்ஷிப் படம் அவர் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம்.

ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்யா நடிக்கிறார்.

படப்பிடிப்பு 40% முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்று சூப்பர்ஸ்டார் பெருமையைப் பாடும் பாடல் ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக பிரெண்ட்ஷிப் படக்குழுவில் இருந்து இந்த சூப்பர்ஸ்டார் ஆந்தம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

இசையமைப்பாளர் உதயகுமார் இசையமைத்துள்ள இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரசிகன் பாடலாக சிம்பு பாடியிருக்கும் என் மாறு மேல, என் நரம்புக்குள்ள சூப்பர்ஸ்டார் என்ற இந்த பாடல் இணையத்தில் வெளியாகிய உடனேயே பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Related Tags :

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே