#BREAKING : மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

மகாராஷ்டிரத்தில் வரும் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 19,459 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 5,48,318 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,64,626 ஆக உள்ளது.

நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே