வங்கக் கடலில் உருவானது ஆம்பன் புயல் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயல் நாளை தீவிர புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது.

இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது.

20 ஆம் தேதி இந்த புயல் மேற்குவங்கம் மற்றும் ஒரிசா கடல்பகுதியை கடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சென்னைக்கு கிழக்கு-தென்கிலுக்கே 670 கி.மீ., தொலைவில் நிலைகெண்டுள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே