நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

மே 3ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்பில்லா பச்சை மற்றும் பாதிப்பு குறைந்த ஆரஞ்ச மண்டலங்களுக்கு மத்திய அரசு தளர்வுகள் அறிவிப்பு

சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என வகைப்படுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்படும்: மத்திய அரசு

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக் கூடாது: மத்திய அரசு

அனைத்து வகை மண்டலங்களிலும், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது: மத்திய அரசு

மருத்துவ தேவையின்றி, முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் வெளியில் செல்லக் கூடாது: மத்திய அரசு

கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், ஏற்கனவே உள்ளதுபோன்று, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, டாக்சிகள், பேருந்துகளை இயக்க கூடாது

கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், சலூன் கடைகள், ஸ்பாக்கள் உள்ளிட்டவற்றை திறக்கத் தடை

சிவப்பு மண்டலம்: அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் காரில்-2 பேரும்(ஓட்டுநர் உட்பட), பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க அனுமதி

தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்; மற்றவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

தனித்தனி கடைகள், குடியிருப்புகளை ஒட்டியுள்ள சிறிய கடைகளை மட்டுமே திறக்க அனுமதி: மத்திய அரசு

ஊரக பகுதிகளில், அனைத்து வகை தொழிலகங்கள், கட்டுமான பணிகள், 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி

ஊரக பகுதிகளில், அனைத்துவகை கடைகளையும்(ஷாப்பிங் மால்கள் நீங்கலாக) திறக்க மத்திய அரசு அனுமதி

ஊரடங்கு நீட்டிப்பு காலத்தில் அனைத்து வகை விவசாய பணிகள், வேளாண் பொருள் உற்பத்திக்கும் அனுமதி

கடல், ஏரிகளில் மீன்பிடிக்க தடையில்லை; மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருந்தால், தொழில் செய்ய தடை

(( சிவப்பு மண்டலத்தைப் போன்று, ஆரஞ்சு மண்டலத்திலும், காரில், டிரைவர் உட்பட 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி))

ஆரஞ்சு மண்டலத்தில், மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் செல்ல அனுமதி: மத்திய அரசு

ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே, உரிய அனுமதி பெற்றே சென்று வர வேண்டும்: மத்திய அரசு

ஆரஞ்சு மண்டலத்தில், காரில், டிரைவரும், அவருக்கு பின்னிருக்கையில் 2 பேரும் அமர்ந்து செல்ல அனுமதி

((பச்சை மண்டலத்தில், ஏற்கனவே, கார்கள், பைக்கில் செல்ல உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்))

பச்சை மண்டலத்தில், 50% இருக்கைகளை குறைத்துவிட்டு, பேருந்துகளை இயக்க அனுமதி: மத்திய அரசு

பச்சை மண்டலத்தில் உள்ள பேருந்து பணிமனைகளில் மொத்தமுள்ள பேருந்துகளில் 50% எண்ணிக்கையில் இயக்க அனுமதி

அனைத்து வகை சரக்குப் போக்குவரத்துக்கும் அனுமதி – மாநிலம் விட்டு மாநிலம் பொருட்களை தடையின்றி கொண்டு செல்லலாம்

அனைத்து மண்டலங்களிலும், விமானம், ரயில், மெட்ரோ இயக்கங்களுக்கு தடை தொடரும்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே