இந்தியாவில் முதன் முறையாக கொரோனா நோய் பாதிப்புக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு இந்தியாவில் முதல்முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் இதுவரை 284 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் 853 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5734-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 150 பேர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டதால், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 18-ஆக உயர்ந்துள்ளது.

அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

டெல்லியில் 576 பேர், தெலங்கானாவில் 427 பேர், கேரளாவில் 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு பிறகு 472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 166-ஐ தொட்டுள்ளது.

தற்போது வரை புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை பல்வேறு மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு இன்று பலியாகியுள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை உயிரிழந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தூரில் மட்டும் இதுவரை 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே