தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 571 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 621 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் 2 பேர் சென்னையை சேர்த்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்று பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.