இந்திய விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..!

பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 வீரர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார்.

பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, தினமும் பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

டாக்டர்கள், சுகாதாரத்துறையினர், தொண்டுநிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று(ஏப்.,3) பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 பேருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதில், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யுவராஜ், பிசிசிஐ தலைவர் கங்குலி, பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கொரோனா அச்சுறுத்தல் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே