தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் படத்தின் முதல் பாடலான சும்மா கிழி பாடலை படக்குழு வெளியிட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் வரும் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என்பதை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.