கொரோனாவை வென்ற 97 வயது முதியவர்!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 97 வயது முதியவர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி 97 வயது முதியவர் ஒருவர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்ததில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வயது முதிர்வின் காரணமாக, உயர் ரத்த அழுத்தம், இருதயப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த அவருக்குச் சிகிச்சை அளிப்பதில் சற்று சிக்கல் ஏற்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை காரணமாக அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.

இதையடுத்து, அவர் குணமடைந்த நிலையில், நேற்று (ஜூன் 12) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

அவரை மருத்துவப் பணியாளர்கள் கைகளைத் தட்டி உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, அம்மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில்,

முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டதாகவும், ரத்த அழுத்தம், இருதயப் பிரச்சினைகளால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர் சிகிச்சை மூலம் முதியவர் குணமடைந்ததாகத் தெரிவித்த அவர், 97 வயதான முதியவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே