85 வயதைக் கடந்த வாக்காளர்கள், வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான வசதிகள் இந்த லோக்சபா தேர்தலில் செய்யபடும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆண், பெண் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், வயதான வாக்காளர்கள் விவரங்களை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
அதன்படி, தற்போது இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 96.88 கோடி.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 96,88,21,926
ஆண்கள் – 49,72,31,994
பெண்கள் – 47,15,41,888
மூன்றாம் பாலினத்தவர்கள் – 48,044
மாற்றுத்திறனாளிகள் – 88,35,449
18 – 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் – 1,84,81,610
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் – 82 லட்சம் பேர்
100 வயதுக்கு மேற்பட்டோர் – 2 லட்சத்து 18 ஆயிரம் பேர்
இந்தியாவில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் – 82 லட்சம் பேர், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மேலும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.