தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகிதம் வாக்குப்பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாவட்டம் வாரியாக பதிவான வாக்கு விபரங்களை தற்போது பார்க்கலாம்.
- திருச்சி மாவட்டத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 76.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 76.66 சதவிகிதமும்,
- சிவகங்கை மாவட்டத்தில் 73.4 சதவிகித வாக்குகளும் பதிவாகின
- விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 73.65 சதவிகித வாக்குகளும்,
- தேனி மாவட்டத்தில் 74.91 சதவீதமும்,
- அரியலூர் மாவட்டத்தில் 81.75 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
- மதுரை மாவட்டத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில் 77.14 சதவிகிதமும்,
- சேலம் மாவட்டத்தில் 81.66 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
- கடலூர் மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80.94 சதவிகித வாக்குகளும்,
- தூத்துக்குடி மாவட்டத்தில் 69.98 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 67.63 சதவிகிதமும்,
- திருப்பூர் மாவட்டத்தில் 73.84 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 80.69 சதவிகிதமும்,
- தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.33 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
- பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.48 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் 79 சதவிகித வாக்குகள் பதிவாகின