50 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு டிக் டாக் தோழி அபியுடன் தலைமறைவான பெண்

சிவகங்கை அருகே டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான தோழியுடன் பெண் ஒருவர் வீட்டில் இருந்த 50 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வினிதா என்பவரின் கணவர், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.

அவர் சொந்த ஊர் திரும்பிய போது மனைவி வினிதாவுக்கும், டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான அபி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.

இதனை கணவன் கண்டித்தும், மனைவி வினிதா கேட்கவில்லை. இதனையடுத்து மனைவி வினிதாவை அவரது தாயார் வீட்டில் கணவர் விட்டுள்ளார்.

ஆனால் வினிதா, தாய் வீட்டில் இருந்து 50 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு, டிக் டாக் தோழி அபியுடன் தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே