10, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 40% குறைப்பு..!!

தமிழகத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 10,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக பள்ளி கல்விதுறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தீவிரமாக பள்ளிக்கல்வித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ பொது முடக்கம் காரணமாக மார்ச் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை ஆன்லைன் மூலமாகவே தற்போது வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து முன் வைக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் முதல்வர் தலைமையிலான ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 28ல் நடைபெற்றது.

இதில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்திற்குப் பின் ஜனவரி 19ல் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில் நாளை மறுதினம் பள்ளி துவங்க உள்ளது இதையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளி திறப்பதிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

அதன்படி கடந்த சில நாட்களாக பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை சுத்தம் செய்தல் , மேசை நாற்காலி உள்ளிட்டவைகளுக்கு மருந்து தெளித்தல் , பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் , குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக்கு மாணவர்களின் பாதுகாப்பிற்கா அரசு அறிவித்த நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

https://drive.google.com/file/d/1tqm7pKA7vPVheEYubsVOAfBvyo2Pv7Qf/preview

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாட வாரியாக குறைக்கப்பட்ட பின் உள்ள பாடங்களை பள்ளி கல்விதுறை வெளியிட்டுள்ளது.

https://drive.google.com/file/d/1RlH2Xj0-RREyZUa8qW6OOZw1vf3Tck-G/preview


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே