#BREAKING : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மார்ச் மாதம் நடைபெற்ற 11. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

11ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் இன்றே அறிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான உடனே மாணவர்கள், முடிவுகளை dge.tn.gov.indge.tn.nic.in, என்ற இணையதளங்களில் பார்க்க முடியும்.

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “மார்ச் 2020 இல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச்/ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத் தேர்வில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள ஆகியவை இணையதளத்தில் இன்று (16.07.2020) வெளியிடப்படும். மேலும் மாணாக்கர்களுக்கு குறுஞ்செயதியாக அனுப்பி வைக்கப்படும்” இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் 24 தேதி நடந்த 12ம் வகுப்பு தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வரும் ஜூலை 27ம்தேதி தேர்வு நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த கல்வியாண்டின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத் சூழ்நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கொரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பரிசீலித்து 24 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி அந்த தேர்வை வரும் 27 ஆம் தேதி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

மாணவர்கள் அவர்கள்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

இதற்கான ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம்.

தனி தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.

நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர் எவராவது இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்” இவ்வாறு கூறியிருந்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே