370 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

109 கோடி ரூபாய் மதிப்பிலான 370 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து பேருந்துகள் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் துவக்கி வைத்த 370 பேருந்துகளில்,

  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 104 பேருந்துகளும்,
  • அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 65 பேருந்துகளும்,
  • சேலம் கோட்டத்திற்கு 57 பேருந்துகளும்,
  • கும்பகோணம் கோட்டத்திற்கு 41 பேருந்துகளும்,
  • மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும்,
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 27 பேருந்துகளும்,
  • திருநெல்வேலி கோட்டத்திற்கு 26 பேருந்துகளும்,
  • மதுரை கோட்டத்திற்கு 20 பேருந்துகளும் வழங்கப்பட்டன.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் 1,314 கோடி ரூபாய் செலவில் 4,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இன்று 370 பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

இதனடிப்படையில் இதுவரை 4,751 புதிய பேருந்துகள் 1,423 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே