ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்..!!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது என முதல்வர் சிவராஜ் செளவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில்,

சேதுபுரா கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகளில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என நம்புகிறேன், அனைவரும் குழந்தைக்காக வழிபடுவோம் என தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஹரிகிஷன் குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் (வயது 3) 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 100 அடிக்கு தண்ணீர் உள்ளதால் சிறுவன் எவ்வளவு அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் என்று தெரியவில்லை.

அண்மையில் தோண்டப்பட்ட அந்த கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே