இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!!

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் 22 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்தது மற்ற நோயாளிகளையும் உறவினர்களையும் அச்சமடைய செய்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2584 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூச்சு திணறல் காரணமாக நேற்று ஒரே நாளில் 22 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக அரசு மருத்துவமனைக்கு வருவதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் சிறிய அளவில் அறிகுறிகள் தெரியும் போதே தாங்களாகவே வெளியில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாமல் முன் கூட்டியே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே