இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 38 பெயர்களில் 34 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள 38 பேர்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனா இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 பேர்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் மத்திய அரசு, தமிழகத்தில் 22 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவித்துள்ளது.
- சென்னை,
 - திருச்சி,
 - விழுப்புரம்,
 - திருப்பூர்,
 - தேனி,
 - நாமக்கல்,
 - செங்கல்பட்டு,
 - மதுரை,
 - கோவை,
 - நெல்லை,
 - ஈரோடு,
 - வேலூர்,
 - திண்டுக்கல்,
 - தூத்துக்குடி,
 - கரூர்,
 - விருதுநகர்,
 - கன்னியாகுமரி,
 - கடலூர்,
 - திருவள்ளூர்,
 - திருவாரூர்,
 - சேலம்,
 - நாகை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
கொரொனா பாதிப்புகள் குறையாவிடில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

