2024-ம் ஆண்டு உலகிலேயே அதிக ஆப் பொருளாதாரம் தொடர்பான வேலைவாய்ப்புகளை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய முன்னேற்றக் கொள்கை மையம் என்ற அந்த அமைப்பு உலகளவில் ஆப் டெவலப்பர் சார்ந்த வேலைவாய்ப்புகளின் தேவையைக் கண்காணித்து வருகிறது.
அதன்படி இந்தியாவில் 2016ல் மொத்தம் 12 லட்சமாக இருந்த அப்ளிகேசன் டெவலப்பிங் பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 16 லட்சமாக அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளது.
அவற்றில் 3 லட்சத்து 62 ஆயிரம் வேலைவாய்ப்புகளுடன் பெங்களூரு முதலிடத்திலும்
2 லட்சத்து 48 ஆயிரம் வேலைவாய்ப்புகளுடன் டெல்லி 2-ம் இடத்திலும் உள்ளது.
மும்பையில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஆப் டெவலப்பிங் வேலைவாய்ப்புகளும்,
ஐதராபாத்தில் ஒருலட்சத்து 28 ஆயிரம் மற்றும்
புனேவில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ஆப் டெவலப்பிங் பணிகளுக்கான வேலைவாய்ப்பும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் 2019 ஏப்ரல் கணக்கெடுப்பின் படி 22 லட்சத்து 46 ஆயிரம் வேலைவாய்ப்பும்,
2019 ஜூலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 20 லட்சத்து 93 ஆயிரம் வேலைவாய்ப்பும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நாடுகளைப் பின் தள்ளி 2024-ம் ஆண்டுக்குள் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்றும் அந்த மையம் தனது கணிப்பில் கூறியுள்ளது.