20வது முறையாக கர்ப்பம் தரித்துள்ள 38 வயது பெண்

மகராஷ்டிர மாநிலத்தில் 38 வயது பெண் ஒருவர் 20 வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளது மருத்துவர்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

பீட் மாவட்டத்தைச் சேர்ந்த லங்காபாய் காரத் என்ற பெண் 38 வயதிற்குள் 16 குழந்தைகளை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 3 முறை கருக்கலைப்பு ஏற்பட்ட லங்காபாய் தற்போது 7வது மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் ஒற்றைக் குழந்தையாகப் பெற்றெடுத்த லங்காபாய்க்கு தற்போது 11 குழந்தைகள் மீதமிருப்பதாகவும், 5 குழந்தைகள் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை கர்ப்பம் தரிக்கும் அந்தப் பெண்ணின் உடல்நிலை குறித்து சிரத்தையுடன் கவனித்து வருவதாக பீட் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அசோக் தோரத் தெரிவித்துள்ளார்.

இதுவரை வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொண்ட லங்காபாய் தற்போதுதான் மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே