பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சீனாவுடனான எல்லை பிரச்சனையில் எழுப்பிய 2 முக்கிய கேள்விகள் !!

இந்திய – சீனா எல்லை பகுதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் நடந்தது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
அதில் பேசிய பிரதமர் மோடி, “நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவி வரவில்லை. நம் நிலப்பரப்பையும் யாரும் ஆக்கிரமிக்கவில்லை. இந்தியா அமைதியையும் நட்பையுமே விரும்புகிறது. அதே நேரத்தில், இறையாண்மையை நிலைநிறுத்துவதுதான் எங்களின் உச்சபட்ச நோக்கம்,” என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், தன் ட்விட்டர் பக்கத்தில்,

“சீனாவின் மூர்க்கதனத்திற்கு இந்தியாவின் நிலப்பரப்பை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் இந்திய ஆக்கிரமிப்பை சீன ஆக்கிரமிப்புக்கு ஒப்படைத்துள்ளார்.

நிலம் சீனமாக இருந்தால்:
1.எங்கள் வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்?
2.அவர்கள் எங்கே கொல்லப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அணைத்து கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி, “எல்லையில் சீனா, தான் முன்னர் வகித்த எல்லைக் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கும் என்றும், சீனாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்பிச் சென்று எல்லை பகுதியில் இயல்பு நிலை நிலைநாட்டப்படும் என்றும் அரசு உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


PM has surrendered Indian territory to Chinese aggression.

If the land was Chinese:

  1. Why were our soldiers killed?
  2. Where were they killed? pic.twitter.com/vZFVqtu3fD

— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2020

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே