துர்கா பூஜைக்கென பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பாடலுக்கு இரு பெண் எம்.பி.க்கள் அழகாக நடனமாடியிருக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நவராத்திரியைப் போன்று வடமாநிலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற துர்கா பூஜை அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது.

சுமார் ஒரு வாரம் நடைபெறும் இப்பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், கேப்டன் டிஎம்டி கம்பி நிறுவனம், நடிகைகளாக இருந்து அரசியல் பிரவேசம் செய்துள்ள இரு பெண் எம்.பி.க்களை நடனமாட வைத்து துர்க்கை அம்மனுக்கு வணக்கம் செலுத்தும் பக்திப் பாடல் ஒன்றை தயாரித்துள்ளது.

அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் நுஸ்ரத் கான் மற்றும் மிமி சக்ரபர்த்தி ஆகியோர் வண்ணமிகு உடையில் ‘Ashey Maa Durga Shey’ என்ற பாடலுக்கு நளினத்துடன் நடனமாடியுள்ளனர்.

மேலும் அசுரனை வதம் செய்யும் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி நடமானமாடி பார்வையாளர்களை கட்டிப்போட்டுள்ளனர்.

டிஎம்டி நிறுவனம் வெளியிட்ட இந்த பாடல் தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டு, எம்.பி.க்களின் நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே