இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு 2,59,170பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,761 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக2,59,170 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு விவரம்:

24 மணி நேர பாதிப்பு: 2,59,170

மொத்த பாதிப்பு: 1,53,21,089

சிகிச்சையில் உள்ளோர்: 20,31,977

மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,31,08,582

நேற்று ஒருநாள் குணமடைந்தோர்: 1,54,761

மொத்த இறப்பு எண்ணிக்கை: 1,80,530

இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை: 12,71,29,113 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனையை பொறுத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் 15,19,486 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை நாடுமுழுவதும் 26,94,14,035 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடைபெற்றுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே