நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜேடர்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அவரது உறவினர் மகன் தங்கராசுவை கைதுசெய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது