#10thResults2020 : 5,248 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்?… அரசு தேர்வுத்துறை இயக்ககம் விளக்கம் !!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.அதன்படி 9 லட்சத்து 39ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில், 4 லட்சத்து 68ஆயிரத்து 70 மாணவிகள், 4 லட்சத்து 71ஆயிரத்து 759 மாணவர்கள் ஆவர். அதேபோல, 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது பற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

  • 5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை மரணமடைந்து விட்டனர்.
  • மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு 658 மாணவர்கள் இடையிலேயே நின்று விட்டனர்.
  • காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு 4,359 மாணவர்கள் முழுமையாக வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே