துபாயில் 2 மாம்பழங்களை திருடியவருக்கு ரூ.96,000 அபராதம்

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்திய ஊழியருக்கு 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, திருடியவரை நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாய் விமான நிலையம் டெர்மினல் 3-ல் இந்திய தொழிலாளி ஒருவர் பணி புரிந்துள்ளார். பயணிகளின் உடைமைகளை விமானத்தில் இருந்து கன்டெய்னரில் ஏற்றுவது மற்றும் இறக்குவது தொடர்பான பணி புரிந்து வரும் இவர்,

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 6 திர்ஹாம் மதிப்புள்ள இரண்டு மாம்பழங்களை பயணிகளின் உடைமைகளில் இருந்து திருடியுள்ளார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த தொழிலாளி, தனக்கு தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்ததாகவும், அதன் காரணமாகவே அந்த இரண்டு மாம்பழங்களை திருடியதாகவும் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பயணிகளின் உடைமைகளில் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்திய தொழிலாளிக்கு, இந்திய ரூபாய் மதிப்புப்படி 96 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்ததோடு, அவரை நாடு கடத்த வேண்டும் என ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே