எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்!

இன்றைய ராசிபலன்
26 -07-2020 (ஞாயிற்றுக்கிழமை)
நல்ல நேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 3.15 முதல் 4.15 வரை
ராகு காலம்
மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல் 12 முதல் 1.30 வரை

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய உங்களுக்கு அலைச்சலும், செலவும் ஏற்படும், தந்தைவழி உறவினர்கள் உங்களுக்கு தக்க நேரத்தில் உதவுவார்கள். நண்பர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சிலரின் உண்மையான முகங்கள் உங்களுக்கு தெரிய வரும்.

ரிஷபம்

உறவினர்களால் ஆதாயம் உண்டு. முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கும் நாள் இது.

மிதுனம்

குடும்பத்தினர் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். உங்களின் ஆலோசனையை பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று. அதனால் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும். அவர்களைப் பொருத்தவரை இலாபம் ஏதும் இருக்காது.

கடகம்

காலை முதலே சுறுசுறுப்பாக இருப்பீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களுக்கு உண்டு. புதிய முயற்சிகளும் சாதகமாக அமையும். பெண்களைப் பொருத்தவரையில் சேமிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்

சிம்மம்

பிற்பகலுக்கு மேல் சாதகமான நாளாக இன்றைய நாள் மாறும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து விடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அக்கம்பக்கத்தினர் உடன் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.

கன்னி

இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரவு வரும்.புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் நிறைந்திருக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரிகளை பொறுத்தவரையில் வியாபாரம் மந்த நிலையில் காணப்படும்.

துலாம்

எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழல் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

விருச்சிகம்

உங்கள் தந்தையால் தேவையான உதவி கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும், ஆனால் பொருளாதார சூழ்நிலை சாதகமாக இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள், பேச்சில் மட்டும் நிதானமாக இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமானதாக அமையும்.

தனுசு

மனதில் உற்சாகம் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் பாதகமான சூழல் இருப்பதால் பேசும் போது கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்கள் மறைந்து போகும்.

மகரம்

நேற்று வரை இருந்த குழப்பங்கள் காணாமல் போகும். உங்கள் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். உங்கள் சகோதரர்களால் தக்க நேரத்தில் உதவி கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

கும்பம்

இன்றைய நாள் உங்களுக்கு அனாவசிய செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கேட்டு எடுக்கவும். பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.

மீனம்

இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை வந்து சேரும். செலவு அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் திறன் ஏற்படும். பெண்களைப் பொறுத்த வரையில் இன்று சோர்வாக காணப்படுவார்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் நஷ்டமும் ஏற்படாமல் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே