இன்றைய ராசிபலன் 06-07-2020 (திங்கட்கிழமை)

சார்வரி வருடம், ஆனி மாதம் 22ம் தேதி, துல்ஹாதா 14ம் தேதி,
6.7.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி காலை 10:22 வரை,
அதன்பின் துவிதியை திதி, உத்திராடம் நட்சத்திரம் நள்ளிரவு 12:41 வரை,அதன்பின் திருவோணம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

  • பரிகாரம் : தயிர்
  • சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
  • பொது: சிவன் வழிபாடு.

மேஷம்:

தொழிலில் புதிய முதலீடுகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகப் பயணங்களால் மனநிறைவு பெருகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற எண்ணம் வளரும்.

ரிஷபம்:

அலுவலகத்தில் கடந்த நாட்களில் சந்தித்த பிரச்னைகள் அனைத்தையும் சமாளிப்பீர்கள். எதிர்கால சந்ததியினருக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம் :

பெண்கள் யாருடைய வம்புக்கும் போக வேண்டாம். வியாபாரத்தில் ஆர்ப்பாட்டம் இன்றிச் செயல்படுவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றங்கள் வரக்கூடும். முறையற்ற வழிகளில் பணம் வருவதை அறவே தவிர்க்க வேண்டும்.

கடகம்:

வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளிடையே வேண்டாத மனக்கசப்பு உருவாகலாம். அக்கம் பக்கத்தினரிடம் பகைக்காமல் இருப்பது நல்லது. பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்கள் அனைத்தையும் அடைப்பீர்கள்.

சிம்மம் :

அலுவலகத்தில் முன்கோபத்தை தவிர்த்தால் பலவகைகளில் நன்மை கிடைக்கும். பெண்கள் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி நிம்மதி அடைவர். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி :

பல காலம் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் நட்பு வட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி அதிகரிப்பதால் செயற்கரிய செயல்களை செய்து சாதனை செய்வீர்கள்.

துலாம்:

அலுவலக ரீதியான பயணங்கள் திருப்தி தருவதாக அமையும். வியாபாரத்தில் பெரிய பதவியில் இருப்போரின் நட்பால் நன்மைகளை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தன்னம்பிக்கை கூடும். சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

விருச்சிகம்:

பிள்ளைகளின் உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. குடும்பப் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து சென்றால் அனுகூலமான நன்மைகளை பெறலாம். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தனுசு :

அலுவலகத்தில் கடந்த நாட்களில் இருந்த பிரச்னைகள் மறைந்து கலகலப்பான சூழல் உருவாகும். பெண்களுக்கு கணவரின் உதவியால் பெருமை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும்.

மகரம்:

பணியாளர்களின் முகத்தில் புன்னகை மிளிரத் துவங்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு வாரிசு உருவாகும். தோல்வியில் முடிந்த செயல்கள் வெற்றி அடைய ஆரம்பிக்கும். சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்புவர்.

கும்பம்:

சுபச்செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு கணவர் வகை உறவுகளால் சில சங்கடங்கள் வந்து நீங்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். வீடு வாங்குவதற்கான முயற்சியில் இருந்தவர்களுக்கு வசதியான வீடு அமையும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான சூழல் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு உண்டு. பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் புதிதாகச் சேரும். வெளியூரில் இருக்கும் மகனின் மூலமாக நல்ல செய்தி கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே