வெளிநாட்டு மனிதர் போல் காட்சியளிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் கலந்து கொண்ட முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்திருப்பதோடு, அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது.


முதலீட்டுகளை ஈர்ப்பது மட்டுமின்றி பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகளையும் பார்வையிட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை உலக அளவில் சொகுசு கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெஸ்லா கார் தொழிற்சாலையை பார்வையிட்டார்.

தற்போது, முதலமைச்சர் டெஸ்லா காரில் இருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து, நாட்டின் முதலமைச்சராக, தற்போது தமிழகத்திற்காக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டியும் வருகிறார்கள்.


அமெரிக்காவின் முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, உலகம் முழுவதும் கார்களை ஏற்றுமதி செய்துவருவதோடு, அதிநவீன எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகவும் விளங்குகிறது. கார்கள் மட்டும் இன்றி சோலார் மின் உற்பத்தியிலும் முதன்மை நிறுவனமாக விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை பார்வையிடும் முதலமைச்சர் பழனிசாமி, டெஸ்லா கார்களின் தொழில்நுட்பங்களையும் கேட்டு அறிந்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே