விரைவில் சென்னையில் வலம்வர உள்ள ‘கிரீன் பஸ்’ – சிறப்பம்சங்கள்

சென்னையில் இயக்கப்பட உள்ள மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட மின்சார பேருந்துகள் கரூரில் இறுதி வடிவம் பெற்றுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை கடந்த மாதம் மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த பேருந்துகளில் ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் வேறு பேட்டரிகள் மாற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக மேம்படுத்தப்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மின்சார பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கிரீன் பஸ்

இவை இறுதிகட்ட பணிகளுக்காக கரூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த புதிய மின்சார பேருந்துகளில் 250 கிலோ மீட்டர் தூரம் ஓடும் வகையில் சக்தி வாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பேட்டரிகளை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும்.

ஜிபிஎஸ், தீயணைக்கும் சாதனங்கள் உள்ளிட்ட வசதிகளோடு இறுதி வடிவம் பெற்றுள்ள இந்த பேருந்துக்கு “கிரீன் பஸ்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிரீன் பஸ்கள் விரைவில் சென்னையில் இயக்கப்பட உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே