வாகன விதிகளை மீறியதாக இன்று ஒரே நாளில் மட்டும் 250 வழக்குகள் பதிவு

சீர்காழியில் வாகன விதிகளை மீறியதாக இன்று ஒரே நாளில் மட்டும் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம் சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், ஆவணங்களை சோதனையிட்டனர்.

இதில் முறையான ஓட்டுனர் உரிமம், வாகன காப்பீடு, ஆர்சி புக் இல்லாதவர்கள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தலைக்கவசம் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் வைத்திருந்தும் அவற்றை அணியாமல் சென்ற ஓட்டுனர்களை தடுத்து நிறுத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டன. இந்த வாகன தணிக்கை மூலம் விதி மீறலில் ஈடுபட்ட ஓட்டுனர்களின் மீது இன்று ஒரே நாளில் மட்டும் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே