வருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட்.31 கடைசி நாள்: மீறினால் அபராதம்

2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே அவகாசம் இருக்கும் நிலையில் மேலும் காலநீட்டிப்பு அளிக்கப்படாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பிலிருந்து கூடுதல் அவகாசம் கோறப்பட்டதை அடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுவிட்டதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராத தொகை மேலும் அதிகரிக்கும். எனவே கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து உரிய நேரத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே