பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இன்று சிறப்பு விருந்தினராக லாஸ்லியாவின் தந்தை கலந்து கொண்டார். வந்த வேகத்தில் லாஸ்லியாவை அழைத்து அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்து இருக்கிறார்.
‘உன்னை இப்படி நடந்து கொள்வதற்க்கா அனுப்பினேன்? நீ என்ன சொல்லிவிட்டு இங்கு வந்தாய் தற்போது நீ என்ன மாதிரி நடந்து கொண்டிருக்கிறாய், உன்னால் என்னை பார்ப்பவர்கள் அனைவரும் காறித் துப்புகிறார்கள் என்று கடுமையாக பேசினார்’ லாஸ்லியாவின் தந்தை.
மேலும் ‘உன்னால் நான் பெருத்த அவமானத்துக்கு உள்ளாகி இருக்கிறேன், இவை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வா’ என்று கடுமையாக திட்டி தீர்த்தார்.
இதை பார்த்த சேரன் லாஸ்லியாவின் தந்தையை சமாதானப்படுத்தி இருக்கிறார்.
இவை அனைத்தையும் ஒன்றுமே தெரியாதவர் போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் கவின்.
நடந்து முடிந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவில் வந்துள்ளது, ஆனால் லாஸ்லியாவின் கன்னத்தில் அறைந்த ஒரு காட்சி மட்டும் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.